பரம்பரை பரம்பரையாக பாக்ஸிங் எனும் குத்துசண்டை விலையாட்டில் கோலோச்சி வரும் வட சென்னை பகுதிவாசி ஜெயம்ரவி. பாக்ஸரான தன் அப்பாவை தனது சின்ன வயதிலேயே இழந்த ரவியை பெரிய பாக்ஸராக்கிறார் பாக்ஸிங்கை குலத்தொழிலாக கொண்ட பொன்வண்ணன். பெரிய பாக்ஸராக வளர்ந்து ஆளாகும் ஜெயம் ரவியை வைத்து பெட்டிங் நடத்தி பணம் பண்ணுகிறார் பிரகாஷ்ராஜ்., ஒரு நாள் குத்துச் சண்டை போட்டியில் தன்னால் தாக்கப்படும் எதிராளி, உயிர்போகும் நிலைக்கு ஆளாவது கண்டு மனம் இறங்கும் ஜெயம் ரவி., இனி குத்துசண்டை வேண்டாம் என ஒதுங்க., அவரை வைத்து பணம் பார்க்கும் பிரகாஷ்ராஜ் அவரை விடா பிடியாக துரத்தி தன் பணத்தாசைக்கு தொடர்ந்து பலியாக்க முயற்சிக்கிறார்.
பிரகாஷ் ராஜின் பணத்தாசையை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொள்ளும் ரவி., அவரிடமிருந்து விலகி நிற்க முயற்சிக்க., அதில் வெகுண்டெழும் – பிரகாஷ்ராஜ்., ரவியை தீர்த்து கட்ட வெளிநாட்டில் இருந்து ஒரு பாக்ஸரை களம் இறக்குகிறார். இறுதியில், விலகி நின்ற ஜெயம் ரவி ஜெயித்தாரா ? வெளிநாட்டு பாக்ஸரும் அவரை களம் இறக்கிய பிரகாஷ் ராஜூம் ஜெயித்தனரா..? எனும் கதையுடன்., ரவி வசிக்கும் பகுதியில் ஹோட்டல் நடத்தும் த்ரிஷாவுடனான ரவியின் காதலையும் கலந்து கட்டி பூலோகத்தை புதுமைலோகமாக படைத்திருக்கின்றனர். [review]
[item review-value="7"]Acting[/item]
[item review-value="7"]Direction[/item]
[item review-value="6"]Music[/item]
[item review-value="8"]Plot[/item]
[content title="Summary" label="Overall Score"]ஜெயம் ரவி – த்ரிஷா – பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரின் நல் நடிப்பு மாதிரியே., S.R. சதீஷ்குமாரின் ஒவிய ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவாவின் இனிய இசை , S.P. ஜனநாதனின் ‘நறுக்’வசனம் … உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள்., N.கல்யாண கிருஷ்ணனின் எழுத்து , இயக்கத்தில் பூலோகம் படத்தை மூவுலகமும் போற்றும்படி மிளிர வைத்துள்ளது என்றால் மிகையல்ல![/content]
[/review]
Comments
View Comment PolicyFor a better understanding visit Comment Policy.