தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸும், பிரபல பைனான்சியர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸும் இணைந்து தயாரித்திருக்கும் ‘தங்க மகன்’ திரைப்படத்தில் ., தனுஷ் ஆக்ஷன் அவதாரம் தவிர்த்து, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடும்ப கதையில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது!

இன்கம்டாக்ஸ் ஆபிஸில் வேலை பார்க்கும் மறதி மன்னனான அப்பா கே.எஸ். ரவிக்குமாரை காணாமல் தவிக்கும் மகன் தனுஷின் எமியுடனான காதல் பிளாஷ்பேக்கும், மனைவி சமந்தாவுடனான குடும்பகுதூகலமும் தான் தங் மகன் மொத்த படமும். தனுஷ், அப்பாவை தேடிக் கண்டு பிடித்தாரா? எமியின் காதல் என்னவாயிற்று? சமந்தா தனுஷின் சம்சாரம் ஆனது எப்படி..? என்பது உள்ளிட்ட வினாக்களுக்கு வித்தியாசமாக விடை அளிக்கிறது தங்கமகன்.

தனுஷ், தமிழ் எனும் பாத்திரத்தில் தமிழ்மகனாக, தங்கமகனாக வழக்கம் போலவே ஜொலித்திருக்கிறார். அப்பா, அம்மாவுக்கு அடங்கிய அமைதியான குடும்ப பையனாகவும், பீர் வாங்கி கொடுத்து, பின்னாலேயே சுற்றி எமியின் காதலைப் பெறும் ஆர்ப்பாட்டமான காதலராகவும், கணவராகவும் தமிழ் தனுஷ் பலே, பலே… சொல்லுமளவிற்கு வெளுத்து வாங்கியிருக்கிறார்.. பேஷ், பேஷ்! எம்.ஜி.ஆர். ஸ்டைலில் எமியிடம் காதலை சொல்லப் போவதும், அப்பா பற்றி விவரம் தெரியாததால் வருத்தத்தில் குடித்துவிட்டு வந்து மனைவி சமந்தாவிடமும், அம்மா ராதிகாவிடமும் உருகுவதும் பிரமாதம்.

தனுஷின் காதலியாக எமி ஜாக்ஸனும், மனம் கவர்ந்த மனைவியாக சமந்தாவும் என்னமாய் நடித்திருக்கிறார்கள். தனுஷை உன் பேரு தமிழ் உங்க அப்பா பேரு இங்கிலீஷா? எனக் கேட்டு கலாய்ப்பது.. உள்ளிட்டவைகளில் எமி பளிச் என்றால் சமந்தாவும் ஹோம்லி குல்கந்தாக குளிர்ச்சி.. வாவ்!

நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில்… தனுஷின் அப்பாவாக, கே.எஸ். ரவிக்குமாரும், அம்மாவாக ராதிகா சரத்குமாரும் கூட பாசம் மிகுந்த பெற்றோராக பொௗந்து கட்டியிருக்கின்றனர். தனுஷயே கலாய்த்து படத்தை சுவாரஸ்யப் படுத்துகிறார் சதீஷ், தனுஷின் அத்தை சீதா, அத்தை மகன் அரவிந்த்.. ஜெயபிரகாஷ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோரும் பளிச்.

தனுஷ் – ஆர்.வேல்ராஜ் உள்ளிட்ட இதே கூட்டணி., ஏற்கனவே “வேலையில்லா பட்டதாரி” எனும் வெற்றிப் படத்தை கொடுத்திருக்கிறது. எனவே தங்கமகனும் தங்கமான படம்தான்.

[review]
[item review-value="8"]Acting[/item]
[item review-value="6"]Direction[/item]
[item review-value="7"]Music[/item]
[item review-value="5"]Plot[/item]
[content title="Summary" label="Overall Score"]
வித்தியாசமான கதை, குடும்பபாங்கான கதைக்கு பொருத்தமான டைட்டில்…. என்பதால் இந்தப் படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி’யின் தங்கமகன்’ என்னும் டைட்டில் சாலப் பொருத்தம்! [/content]
[/review]